Wednesday, January 16, 2013

வாழ்க்கைக்காக ஒரு மரணம் - ஹஸனீ


வல்ல நாயனின் திருப்பெயர் போற்றீ

வாழ்க்கைக்காக ஒரு மரணம்




عن سبيعة بنت الحارث الأسلمية ، ولفظه أن رسول الله صلى الله عليه وسلم قال:  من استطاع منكم أن يموت بالمدينة فليمت، فإنه لا يموت بها أحد إلا كنت له شفيعًا أو شهيدًا يوم القيامة  وقال: هذا حديث حسن صحيح غريب من حديث أيوب السختياني .
وأخرجه الإمام أحمد في ( المسند ج 2ص 274، 104 )، وأخرجه ابن ماجه في ( المناسك ج 2 ص 1039 ورقم 3112 ) وصححه ابن حبان في ( صحيحه ج9 ص57 ).
           
وقال الهيثمي في ( مجمع الزوائد ج 3 ص 306 ): رواه الطبراني في ( الكبير 

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹாபி பெண்மணி சபீஆ பின்த் ஹாரிஸ் 
அவர்கள் அறிவிக்கிறார்கள் " உங்களிலே யார் மதீனாவிலே வந்து மரணமடைய சக்திபெற்றிருக்கிறாரோ அவர் மதீனாவில் வந்து மரணம் அடையட்டும். ஏனெனில் அங்கு மரணிப்பவர்களுக்கு கியாமத் நாளில் நான் பரிந்துரைப்பவராகவும், சாட்சி சொல்பவராகவும் இருப்பேன்." 

நபிகளாரின் வாழ்வியல் குறித்து விரிவாக விழாக்கள் நடைபெறும் இன்றைய காலையில், இஸ்லாமியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக


இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.


இந்த ஹதீஸை பத்திற்க்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள், இன்னும் பல்வேறு ஹதீஸ் கிரந்தங்களிலும் 


பதிவுசெய்யப்பட்டுள்ளது.


எத்தணையோ ஹதீஸ்கலை வல்லூநர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இந்த நபிமொழி, அவர்களை மதீனாவிற்கு இழுத்துசென்று மரணம் 


வரை அங்கே இருக்கவைத்தது.


உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மதீனத்து மண் மீது ஒரு காதல், ஏனெனில் நம் உயிரினும் மேலான நபி அங்கு 


உறங்குகிறார்கள் என்ற ஒரேகாரணத்தினால்.


இந்த ஹதீஸ் அடிப்படையில் தான் ஒவ்வொரு இஸ்லாமியனும் மதீனாவில் சென்று மரணமடைய ஆசைப்படுகிறான்.


நல்வாழ்க்கை வேண்டும் அதற்க்கு கை நிரம்ப சம்பாத்தியம் வேண்டும் இந்த ஊருக்கு / நாட்டிற்க்கு சென்றால் நிரம்ப சம்பாதிக்கலாம் நன்றாக வாழலாம் என்ற நிலையில் பயணங்கள் நிகழ்கிறது.


இவ்வுலக வாழ்வு சிறக்க தினம் தினம் பயணங்கள் தொடர்ந்து உலகில் நிகழ்கின்றன.


ஆனால், இங்கே நல்முறை முறையில் மரணமடைய ஒரு உவப்பான பயணம் இது.


நிலையில்லா உலகில் வாழ எவ்வளவோ சிரமம் மேற்கொள்கிறோம். ஆனால் அனைத்து சிரமத்திற்கு பின் அடைந்ததை நாம் தான் 


அனுபவிப்போமா அல்லது வேறு யாருமா? என்று நமக்கு தெரியாது.


அப்படித்தான் ஒவ்வொரு இஸ்லாமியனும் வாழ்நாளில் நபியோடு ஒன்றாக இருக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை இறந்த பின்னாவது 


இந்த மதீனத்து மண்ணில் ஒன்றாகிபோவோம் என்று தான் ஆசைப்படுவான், அல்ல அல்ல ஆசைப்படவேண்டும்.


இந்த ஹதீஸைக்குறித்து காழி இயாள் அவர்கள் விளக்க அளிக்கும் போது கூறினார்கள் " நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த ஸஹாபாக்களுக்கு அவர்கள் சாட்சியாளராகவும், அவர்களின் காலத்திற்கு பின் உள்ளவர்களுக்கு பரிந்துரைப்பவரகவும் இருப்பார்கள்".


சில கால வாழ்க்கைகே பல சிரமங்களை ஏற்றுக்கொள்ளும் மனிதன், அவனின் உண்மையான வெற்றியாகிய மறுமையின் வெற்றியைக்குறித்து சிந்திக்காமல் இருந்தால் உண்மையில் நஷ்டவாளியாகிவிடுவான்.


மறுமையில் மாநபியின் ஷபாஅத் (பரிந்துரை) மட்டுமே ஒவ்வொரு இஸ்லாமியனாலும் எதிர்பார்க்கப்படுகிற ஒன்று.


அந்த ஷபாஅத் கொண்டுதான் முஸ்லிம்களின் வெற்றி இன்னும் ஈடேற்றம் நிச்சயிக்கப்படும் என்பது திண்ணம்.


இது பற்றி நாம் காதுகளை பல முறை தொட்டுச்சொல்லும் ஹதீஸின் கருத்து

"

இறுதித் தீர்ப்பு நாளில், இறை நம்பிக்கையாளர்கள் ஒன்று திரண்டு, நமக்காக நமது ரப்பிடம் பரிந்துரைக்க (யாரிடமாவது) நாம் கேட்க 


வேண்டாமா? என்று கூறுவார்கள். எனவே ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, நீங்கள் மனித இனத்தின் தந்தையாக உள்ளீர்கள். அல்லாஹ்,


உங்களை அவனது கரத்தினாலேயே படைத்து, உங்களில் ஆன்மா ஊதி, அவனது வானவர்களை உங்களுக்கு தலைசாய்க்க வைத்தான் எனவே


நாங்கள் இருக்கும் இந்த இடத்தில் இருந்து எங்களை விடுவிப்பதற்காக, நீங்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுங்கள் என 


சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் இன்று இறைவன் கடுமையான கோபத்தில் உள்ளான் இது போன்று இதற்கு முன்னால் அவன் 


கோபப்பட்டது இல்லை இதற்கு பின்னும் இது போன்று கோபப்படமாட்டான், என்னை ஒரு மரத்தை விட்டு தடுத்திருந்தான் அவ்விஷயத்தின் 


நான் அவனுக்கு மாறு செய்துவிட்டேன் ஆகையால் நான் உங்களுக்காக பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை என்று கூறி என் ஆத்மாவே 


என் ஆத்மாவே என் ஆத்மாவே நீங்கள் நூஹ் நபியிடம் செல்லுங்கல் என்று கூறுவார்கள்

 


எனவே மக்கள் நூஹ்(அலை) அவர்களிடம் வந்து முறையிடுவார்கள், நீங்கள் பூமியில் இறைவனால் அனுப்பப்பட்ட முதல் ரஸூல் ஆவீர்கள் 


இறைவன் உங்களுக்கு நன்றியுள்ள அடியார் என்று பெயரிட்டிருந்தான் ஆகையால் இன்றைய தினம் இறைவனிடம் எங்களுக்காக நாங்கள் 


இருக்கும் நிலையிலிருந்து இருந்து எங்களை விடுவிக்க பரிந்துரை செய்யுங்கள் என்று கூறுவர் அதற்க்கு  அவர்கள் நான் உங்களுக்கு 


பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை என்று சொல்லி விட்டு, இன்று இறைவன் கடுமையான கோபத்தில் உள்ளான் இது போன்று இதற்கு 


முன்னால் அவன் கோபப்பட்டது இல்லை இதற்கு பின்னும் இது போன்று கோபப்படமாட்டான் என்று கூறி, அவர்கள் இறைவனிடம் தமக்குத் 


தெரியாத ஒன்றைப் பற்றி வேண்டுகோள் வைத்ததை கூறி அதற்காக வெட்கப்பட்டு, என் ஆத்மாவே என் ஆத்மாவே என் ஆத்மாவே என்று 


கூறிக்கொண்டு நீங்கள் இப்ராஹிம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள்.

 

எனவே இப்ராஹிம் (அலை) அவர்களிடம் மக்கள் வருவார்கள். அவரிடம் கூறுவார்கள் நீங்கள் இறைவனின் தூதர், இன்னும் பூபாகத்தில் 


இறைவனி தோழர் ஆகையால் இன்றைய தினம் இறைவனிடம் எங்களுக்காக நாங்கள் இருக்கும் நிலையிலிருந்து இருந்து எங்களை விடுவிக்க 


பரிந்துரை செய்யுங்கள் என்று கூறுவர் அதற்க்கு  அவர்கள் நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை என்று சொல்லி விட்டு


இன்று இறைவன் கடுமையான கோபத்தில் உள்ளான் இது போன்று இதற்கு முன்னால் அவன் கோபப்பட்டது இல்லை இதற்கு பின்னும் இது 


போன்று கோபப்படமாட்டான் என்று கூறி நான் மூன்று இடங்களில் தவறுதலாக பேசிவிட்டேன் என் ஆத்மாவே என் ஆத்மாவே என் 


ஆத்மாவே என் கூறிக்கொண்டு நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள்



எனவே மூஸா(அலை) அவர்களிடம் மக்கள் வருவார்கள். அவரிடம் கூறுவார்கள் நீங்கள் இறைவனின் தூதர், இன்னும் அல்லாஹ் உங்களுக்கு 


தூதுத்துவத்தைக்கொடுத்தான் இன்னும் பூமியிலே தன்னோடு பேசுபவராக தேர்ந்தெடுத்தான் ஆகையால் இன்றைய தினம் இறைவனிடம் 


எங்களுக்காக நாங்கள் இருக்கும் நிலையிலிருந்து இருந்து எங்களை விடுவிக்க பரிந்துரை செய்யுங்கள் என்று கூறுவர் அதற்க்கு  அவர்கள் 


நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை என்று சொல்லி விட்டு, இன்று இறைவன் கடுமையான கோபத்தில் உள்ளான் இது 


போன்று இதற்கு முன்னால் அவன் கோபப்பட்டது இல்லை இதற்கு பின்னும் இது போன்று கோபப்படமாட்டான் என்று கூறி நான் 


அனுமதிக்காத நிலையில் ஒரு ஆத்மாவை கொன்று விட்டேன் என் ஆத்மாவே என் ஆத்மாவே என் ஆத்மாவே என்று கூறி நீங்கள் ஈஸா 


(அலை) அவர்களிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள் ,

 



எனவே மக்கள் ஈஸா(அலை) அவர்களிடம் வருவார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதராகவும், மரியமின் மீது போடப்பட்ட அவனது 


வார்த்தையாகவும், அவனது ரூஹாகவும் இன்னும் தொட்டிலில் மக்களிடம் பேசியவராகவும் விளங்குகிறீர்கள் என்று கூறுவார்கள்.


ஆகையால் இன்றைய தினம் இறைவனிடம் எங்களுக்காக நாங்கள் இருக்கும் நிலையிலிருந்து இருந்து எங்களை விடுவிக்க பரிந்துரை 


செய்யுங்கள் என்று கூறுவர் அதற்க்கு  அவர்கள் நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை என்று சொல்லி விட்டு, இன்று 


இறைவன் கடுமையான கோபத்தில் உள்ளான் இது போன்று இதற்கு முன்னால் அவன் கோபப்பட்டது இல்லை இதற்கு பின்னும் இது போன்று 


கோபப்படமாட்டான் என்று கூறி தன் பாவங்கள் பற்றி எதுவும் குறிப்பிடாமல் என் ஆத்மாவே என் ஆத்மாவே என் ஆத்மாவே நீங்கள்  


முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள் .

 


எனவே மக்கள் என்னிடம் வருவார்கள். நீங்கள் இறைவனின் தூதர் நீங்கள் தான் கடைசி நபி, அல்லாஹ் உங்களின் முன் பின் பாவங்களை 


மன்னித்துவிட்டான் ஆகையால் இன்றைய தினம் இறைவனிடம் எங்களுக்காக நாங்கள் இருக்கும் நிலையிலிருந்து இருந்து எங்களை 


விடுவிக்க பரிந்துரை செய்யுங்கள் என்று கூறுவர்  நான் அர்ஷிர்க்கு கீழே வந்து சஜ்தா செய்தவராக விழுவேன் இறைவன் தன் சகல வித 


நிஃமத்துகளை என் மீது பொழிவான் இதற்கு முன் இது எவருக்கும் பொழியப்படாத்து .

 

பிறகு என்னிடம், உங்கள் தலையை உயர்த்துங்கள், உங்கள் வேண்டுகோளை முன் வையுங்கள். அது வழங்கப்படும். சொல்லுங்கள். அந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். என்று சொல்லப்படும். நான் என் சமூகமே என் சமூகமே என்று கூறுவேன்.

 

பின் எனக்கு சொல்லப்படும் உங்கள் உம்மத்தில் உள்ள கேள்வி கணக்கின்றி சுவனம் புக தகுதிவாய்ந்தவர்களோடு நீங்கள் சுவனத்தில் வலது 


புற வாயில் வழியாக சுவனத்தில் புகுவீராக என்று சொல்லப்படும். (புஹாரி)


ஒரு முஃமினின் மறுமையைப்பற்றிய நம்பிக்கையில் நபியவர்களின் ஷபாஅத் பற்றி நம்பிக்கை வைத்து கடமையாகும்.


மேலே சொன்ன இந்த ஹதீஸின் அடிப்படையில் நபியவர்களுக்கு ஷபாஅத்தே உல்மா என்று சொல்லப்படும் மிக உயர்ந்த பரிந்துரை 


தகுதியும், மகாமே மஹ்மூதாவும் கொடுக்கப்படும்.


நபியவர்களின் பரிந்துரையால் ஒரு பெரும் கூட்டத்தினர் கேள்விகணக்கின்றி சுவனத்தில் நுழைவர் அது பற்றிய ஒரு ஹதீஸில்


" என் உம்மத்தில் எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவனம் புகுவர், அப்பொழுது அவர்களிடம் கேட்கப்பட்டது நீங்கள் இன்னும் 


இறைவனிடம் அதிகப்படுத்தி கேட்டிருக்க கூடாதா? நபியவர்கள் கூறினார்கள் நான் கேட்டேன் என் இறைவன் ஒவ்வொரு எழுதாயிரம் 


பேருடன் எழுபதாயிரம் பேருக்கு அனுமதி கொடுத்தான், நீங்கள் இன்னும் அதிகப்படுத்தி கேட்டிருக்கவேண்டாமா? என்று நபியவர்கள் 


கேட்டார்கள்.(திர்மிதி)


நபியவர்கள் கூறினார்கள் கேட்டேன் அதற்க்கு என் இறைவன் தன் புனிதமான கரத்தால் மூன்று முறை மீண்டும் எடுத்துப்போட்டான் .


2. நரகில் நுழைய தகுதிபெற்றவரகள் நபியவர்களின் பரிந்துரையால் அதிலிருந்து காக்கப்படுவர்.


3. நரகில் நுழைந்த சிலர் நபியவர்களின் பரிந்துரையால் நரகிலிருந்து வெளியாக்கப்படுவர்.


4.  இன்னும் சுவனத்தில் உள்ளவர்கள் நபியவர்களின் பரிந்துரையால் தான் இருக்கிற நிலையிலிருந்து உயர் நிலைக்கு கொண்டு செல்லப்படுவர்கள்.


இந்த விஷயங்கள் ஒவ்வொரு முஸ்லிமும் கொள்ள வேண்டிய ஈமானிலிருந்து ஒரு பகுதி.


ஆக, இந்த ஹதீஸிலிருந்து புரிகிற மதீனத்து மண் நம் மரணத்தின் மண்ணாகவேண்டும்.


இறைவனிடம் அதற்காக துஆ கேட்கவேண்டும்.


அது எப்படி மரணத்தை கேட்கலாமா? என்று உங்கள் உள்ளம் கூறலாம்.


உலகில் நாம் வேண்டும் பொருட்கள் ஒரு நாள் அழிந்து போகும் என்று தெளிவு இருந்த பின் தான் அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் கேட்டோம்.


இது அழிவிற்க்கு பின் உள்ள நிலையான நீண்ட வாழ்வைப்பற்றியதல்லவா?


இது அழிவல்ல வாழ்வைப்பற்றியது.


அடுத்து நம் மரணத்தை கேட்கவில்லை, மரணமாகிற இடத்தை தான் கேட்கிறோம்.


ஆக, நம் முழுவாழ்க்கைக்கு இதை நோக்கமாக ஆக்கிவிடலாம், இது தான் உண்மையான வெற்றி. 


இந்த இறைபிராத்தனை நமதாகட்டும் மதீனத்து மண்ணின் மணம் நம் மேனியை தழுவட்டும்




- பேரா. இஸ்மாயில் ஹஸனீ




--
*more articles click*
www.sahabudeen.com


No comments: